நம் மடம் ஸ்ரீ ராமானுஜ பார்வைகள் 1000 பணிகள் 10000 என்ற அறக்கட்டளை மூலமா எண்னற்ற சமூக பணிகள் ஆற்றி வருகின்றன.
தீண்டாமை
-
உடையவரின் உபதேசங்கள் அனைத்தும் உலகறிய செய்யவே ஆச்சார்ய புருஷர்கள் மற்றும் ஜீயர்களை நியமித்தார்.
-
உடையவரின் உபதேசங்களில் முக்கியமான தீண்டாமை ஒழித்தல் மற்றும் மனிதர்களிடையே சமத்துவத்தை ஊக்குவித்தல் இதனையே ப்ரதானமாக கொண்டு நம் மடம் செயல்படுகிறது.
-
தீண்டாமை அழிக்கும் பொருட்டு திருக்குலத்தார் வசிக்கும் இடங்களுக்கே சென்று உடையவரின் சித்தாந்தத்தை போதித்து அவர்களின் நல்வாழ்விற்கு ஏற்ற கார்யங்களை நேரே சென்று நம் ஜீயர் ஸ்வாமிகள் செய்துவந்து கொண்டு இருக்கின்றார்.
இயற்கை இடர்பாடுகள்
-
2016ஆம் ஆண்டு வர்த்தா புயலால் கடலூர் மாவட்டம் துண்டிக்கப்பட்ட போது அங்கு நம் ஜீயர் ஸ்வாமிகளே களம் இறங்கி ஆக்கப்பணிகளில் ஈடுபட்டார்
-
இடைவிடாது உணவு வழங்கிக்கொண்டிருந்தார் மற்றும் மருத்துவ உதவிகளும் செய்தார்.
- அவ்மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்தார், அவர்களின் மறுவாழ்விற்கும் வழிவகை செய்தார்.
- 2018ஆம் ஆண்டு கஜா புயலால் ஏற்பட்ட இழப்பிற்காக மன்னார்குடி சுற்றியுள்ள கிராமங்கள் அனைத்திற்குமான அத்யாவசிய தேவைகள் மற்றும் அரிசி சிப்பங்கள் வழங்கினார்
- தற்போது 2020ஆம் ஆண்டு கொரோணோவால் உலகமே முடங்கி போன போது நம் ஜீயர் ஸ்வாமிகள் அனுதினும் நான்கு வேளையாக பிரித்து அனுதினம் 3000 நபர்களுக்கு அவர்கள் இருக்கும் இடங்களுக்கே கொண்டு சேர்த்தார்.
- திருவரங்கத்தில் உள்ள அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் பாதுகாப்பு மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கினார்.
- திருவரங்க திருக்கோயிலை சுற்றி இருந்த ஆதரவு அற்ற அனைவரும் நம் மடத்திலே பசியாறி சென்றனர்
அன்னதானம்
- அன்னம் ப்ரப்ரும்ம சொரூபம்
- நம் மடங்களில் அனுதினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது. குறைந்தது 20 முதல் 50 நபர்கள் வரை பசியாறி செல்கின்றனர்
- சாதி சமய பாகுபாடு இன்றி நம் மடத்தில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது அதுவும் “சமபந்தி போஜனம்” நடைபெறும்.
திவ்யதேச உத்சவப்பிரசாதம்
- அகிலம் போற்றும் இராஜமன்னார்குடி ஆனித்தெப்ப திருவிழாவிற்கு ஆயிரம் நபர்களுக்கு குறைவின்றி பிரசாதம் வழங்கப்படுகின்றது
- திருவரங்க மடத்தில் திருவரங்கத்தில் நடைபெறும் அனைத்து தேர்திருவிழா காலங்களில் 1000 முதல் 3000 நபர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது
- ஸ்ரீ வைகுந்த ஏகாசதி அன்று உப்புமா குறைந்தது 1000 வரை வழங்கப்படுகிறது
- துவாசதி பராணையும் அனைத்து பாகவதர்களுக்கும் வழங்கப்படுகிறது.
நாட்டுப்பசுக்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு
- செண்டும் கோலும் கொண்ட கோபாலனது திருக்கோயில் ஜீயர் ஸ்வாமிகளுக்கு கோசம்ரஷனம் பற்றி சொல்லவேண்டுமா
- எங்கு எந்த கால்நடைகளுக்கு ஆபத்து என்னறால் அங்கு நம் மடம் அங்கு இருக்கும்
- அடிமாடுளுக்கு செல்லும் பல வாகனங்களை தடுத்து நிறுத்து அவ்மாடுகளை பாதுகாத்தும் வந்துள்ளார்
- நாட்டுவகை பசுக்களின் வகைகளை காத்து மீட்டு எடுக்கும் செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றோம்
- இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக “செங்கமலம் கோசாலை” 2020 மாட்டுப்பொங்கல் அன்று தூத்துக்குடியில் துவங்கி நன்முறையில் இயங்கி வருகின்றது.
நூலகம்
- நூலகம் ஆயிரம் ஆசானுக்கு சமம் என்பார்கள்
- அத்தையக நூலகம் ஒன்று அமைக்கப்பட உள்ளது
- நம் சம்பிரதாய விசயங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் நம் நூலகத்தில் கிடைக்கும் வண்ணம் அமைய உள்ளது.
- நம் அனைத்து சித்தாந்தங்களும் ( துவைதம், அத்துவைதம் மற்றும் விஷ்ட்டாத்துவைதம்) ஒரே இடத்தில் அமைய உள்ளது.
புராதனகோயில்கள் பாதுகாப்பு மற்றும் நித்யபடி திருவாரதனம்
- பராமரிப்பு இன்றி இருக்கும் புராதன கோயில்களை ஏற்று நிர்வாகம் செய்கின்றனர்
- சைவ வைணவ கோயில்கள் பாகுபாடு இன்றி பராமரிப்பு இல்லாத கோயில்களுக்கு நித்யபடி திருவாராதனம் நடைபெற வழிவகை செய்வது
யோகா
- நம் திருவரங்க மடத்தில் அனுதினமும் யோகாசிரியர் கொண்டு பயிற்றுவிக்கப்படுகிறது