ஸ்ரீ செங்கமலம் இராஜகோபாலன் கோசாலை

ஸ்ரீ விகாரி வருடம் தைத்திங்கள் 2-ஆம் நாள் (16.01.2020) வியாழக்கிழமை அன்று தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டம், பாஞ்சாலங்குறிச்சி ஊராட்சி அகிலாண்டபுரம் கிராமத்தில் ஸ்ரீ சடகோப இராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் மேல்கோட்டை, கோயம்புத்தூர் நாராயண ஜீயர் ஸ்வாமிகள் மற்றும் நம் ஜீயர் ஸ்வாமிகளும் அத்வைத சன்யாசிகள் இரமானந்த மகராஜ் ஸ்வாமிகள் மற்றும் அத்வைதானந்த சரஸ்வதி ஸ்வாமிகள் அனைவர் முன்னிலையில் 20 ஏக்கர் நிலப்பரப்பில் “ஸ்ரீ செங்கமலம் இராஜகோபாலன் கோசாலை” துவங்கப்பட்டது.



  • சைவ, வைணவ மற்றும் மாத்வ நித்ய விஸ்வரூப தரிசனத்திற்கு முதலிடம் கோ(பசு) விற்குதான் அத்தகைய கோவின் பெருமைகளை நம் சனாதன தர்மம் விவரிகின்றது.
  • சனார்தன தர்மத்தின் படி நாம் அனைவரும் வாழ்வில் ஒரு முறையாவது கோ – தானமும், கோ – பூசையும் செய்து ஆக வேண்டும்.
  • கோ என்பது அனைத்து தெய்வங்களும் குடியிருக்கும் ஒரு வைபவமான சரீரம் ஆகும்

கோசாலை நடவடிக்கைகள்

  • வயது முதிர்ந்த நாட்டு மாடுகள் பராமரிக்கப்படும்
  • கறவை இல்லாத மாடுகளை எங்களிடம் கொடுக்கலாம்
  • தீவனம் பற்றாக்குறை உள்ள மாடுகள் இருந்தாலும் எங்களிடம் கொடுக்கலாம்
  • கோ பூசைக்கான மாடு மற்றும் கன்றுகளை தத்தெடுத்தல்
  • செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கோபூசை நடைபெறும்

எதிர்கால திட்டம்

  • நாட்டு மாடுகளில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்கள்
    1. பால்
    2. தயீர்
    3. நெய்
    4. பற்பொடி
    5. சோப்பு
    6. வாசனை திரவியங்கள்
    7. வலி நிவாரணிகள்
    8. கோமீயம்
    9. கொசுவிரட்டி
    10. சாம்பிராணி
    11. ஊதுபத்திகள்
    12. பால் சங்கங்கள் அமைக்கப்படும்
பங்களிப்புகள்
“ யாவருக்குமாம் இறைவற்கொரு பச்சிலை யாவருக்கு மாம் பசு வுக்கொரு வாயுறை யாவருக்கு மாம்உண்ணும் போததொரு கைப்பிடி யாவருக்கு மாம்பிறர்க் கின்னுரை தானே ”

பரம்பொருளை பூசிக்க ஓர் பச்சிலை (வில்வ இலை)பசுமாட்டிற்கு கொஞ்சம் புல், தான் சாப்பிடும் போது பசித்தவருக்கு ஒரு பிடி சோறு,பிறர் மனம் நோகத வண்ணம் இனிமயான இன்சொல் பேசுவதே – என்று திருமூலர் பட்டியல் இடுவதில் ஆவிற்கு அளிக்கும் கடைமையும் நமக்கு சுட்டி காட்டுகின்றார்.

நம் கோசாலை பராமரிப்பில் தாங்களும் பங்கு கொள்ள இங்கே சொடுக்கவும்


  • ஒரு மாட்டின் ஒரு நாள் தேவை
  • ஒரு மாட்டின் ஒரு மாதத்திற்கான தேவை
  • ஒரு மாட்டை தத்தெடுத்தல்
  • அனைத்து மாட்டிற்கான ஒரு நாள் தீவண செலவு
  • கோபூசை
  • கோதானம்