ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:


அஷ்டதிக் கஜங்கள்:

  • வானமாமலை ஜீயர் (பொன்னடிக்கால் ஜீயர்)
  • பட்டர்-பிரான் ஜீயர்
  • திருவேங்கட ராமானுஜ ஜீயர்
  • கோவில் அண்ணா
  • பிரதிவாதி பயங்கரம் அண்ணா
  • எறும்பியப்பா
  • அப்பிள்ளை
  • அப்புள்ளார்

இவர்களை பற்றி வைணவ சம்பிரதாயத்தில் அறியாதோர் இல்லை, நம் மணவாள மாமுனிகளால் நியமிக்கப்பட்ட இவ் அஷ்டதிக் கஜங்களை தவிர

  • ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் மடம்
  • திருமலை சின்ன ஜீயர் மடம்
  • காஞ்சிபுரம் அழகியமணவாள ஜீயர் மடம்
  • ஸ்ரீபெரும்புதூர் எதிராஜ ஜீயர் மடம்

மற்றும் நம் ராஜமன்னார்குடி செண்டலங்கார ஜீயர் மடம் என்று நம் பெரிய ஜீயரால் நியமிக்கப்பட்ட மடங்களில் நம் செண்டலங்கார ஜீயர் மடமும் ஒன்று.


“சோழதேச நாட்டுத்திவ்யதேசம் நாற்பதில் திருவரங்கம் சார்ந்த திருக்கோழியூர்(உறையூர்), திருக்கரம்பனூர்(உத்தமர் கோயில்), திருவெள்ளறை, திருப்பேர்நகர்(கோயிலடி), திருவன்பில் போன்ற திவ்யதேசங்களை தவிர ஏனைய திவ்யதேசங்களுக்கென்று இருந்த ஒரே ஜீயர் மடம் என்றால் நம் மணவாள மாமுனிகள் நியமித்த நம் ராஜமன்னார்குடி செண்டலங்கார ஜீயர் மடம் மட்டுமே!”

அரித்திரா நதிக்கரையில் இருந்த செண்டலங்கார ஜீயர் மடத்தின் பீடத்தை இருநூறு ஆண்டுகளாக ஜீயர்கள் யாரும் அலங்கரிக்கவில்லை. மன்மத வருடம் 2015 ஆம் ஆண்டு ஆனித்திங்கள் 16ஆம் நாள்(01-07-2015) ஸ்ரீபெரியஜீயரின் திருநட்சத்திரமான மூலம் திருநட்சத்திரம் பௌர்ணமி திதி கூடிய நன்னாளில் அமிர்த யோகத்தில் தற்போது அரித்திரா நதி வடகரையில் உள்ள செண்டலங்கார ஜீயர் மடத்தின் பீடத்திற்கு சம்பத்குமார ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் ஸ்ரீ செண்டலங்கார செண்பகமன்னார் சம்பத்குமார ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகளாக பீடாரோகணம் நடைபெற்றது.