ஆன்மீக சேவைகள்

இருநூறு வருடங்களுக்கு முன் சோழதேசம் திருவரங்கம், திருக்கோழியூர், திருக்கரம்பனூர், திருவெள்ளறை, திருப்பேர்நகர் மற்றும் திருவன்பில் போன்ற திவ்யதேசங்களைத்தவிர ஏனைய முப்பத்தியாறு திவ்யதேசங்களுக்கு ஜீயராக இருந்த நம் மன்னார்குடி செண்டலங்கார ஜீயர் ஸ்வாமிகளிடம் ஸ்ரீவைஷ்ணவர்களாக இணைந்தோர் எண்ணற்றோர்கள்.

திருமாலை அடைய திருவடி பணிதல் தவிர வேறு வழியும் உண்டோ ! நம் சித்தாந்தமே குரு சிஷ்ய பாவமே அத்திருமாலே நம் முதல் ஆச்சாரியராவார்.

நமது ஸ்ரீ வைஷ்ணவ குரு பரம்பரையானது ஸ்ரீ பெரிய பெருமாள் , ஸ்ரீ பெரிய பிராட்டியார் தொடங்கி ஸ்ரீ.ஸேனை முதலியார் முதற்கொண்டு ஸ்வாமி ஸ்ரீ. மணவாள மாமுனிகள் ஈறாக உள்ள நம் குரு பரம்பரையில்,

அம்மணவாள மாமுனிகள் நியமித்த பீடங்களில் ஒன்று நம் ஸ்ரீ செண்டலங்கார ஜீயர் மடமும் ஆகும். இந்த பீடத்தில் இன்று அலங்கரிக்கும் நம் ஸ்ரீ செண்டலங்கார செண்பக மன்னார் சம்பத்குமார ராமானுஜ ஜீயரிடம் பஞ்சசம்ஸ்காரம் செய்துக்கொண்டோர் இந்த பாரத தேசம் முழுவதும் உள்ளனர்


பஞ்சசம்ஸ்காரம்


அரித்திரா நதிக்கரையில் இருந்த செண்டலங்கார ஜீயர் மடத்தின் பீடத்தை இருநூறு ஆண்டுகளாக ஜீயர்கள் யாரும் அலங்கரிக்கவில்லை. மன்மத வருடம் 2015 ஆம் ஆண்டு ஆனித்திங்கள் 16ஆம் நாள்(01-07-2015) ஸ்ரீபெரியஜீயரின் திருநட்சத்திரமான மூலம் திருநட்சத்திரம் பௌர்ணமி திதி கூடிய நன்னாளில் அமிர்த யோகத்தில் தற்போது அரித்திரா நதி வடகரையில் உள்ள செண்டலங்கார ஜீயர் மடத்தின் பீடத்திற்கு சம்பத்குமார ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் ஸ்ரீ செண்டலங்கார செண்பகமன்னார் சம்பத்குமார ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகளாக பீடாரோகணம் நடைபெற்றது.

இராமானுஜர் மூலம் திருமால் திருவடியை அடைய விருப்ப உடைய, ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கு ஆண், பெண், சாதி வேறுபாடு இன்றி பஞ்சசம்ஸ்கார சடங்குகள் செய்விக்கப்படுகிறது சடங்கு முறைகள்

ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தை பின்பற்ற விரும்பும் எவருக்கும், ஆண், பெண் வேறுபாடு மற்றும் சாதி வேறுபாடு இன்றி செய்விக்கப்படுகிறது. பஞ்ச சம்ஸ்கார சடங்கு செய்து கொள்வதன் மூலம் தாங்கள் இராமானுஜருடன் தொடர்புடையவர்கள் என்றும், அவர் மூலம் மோட்சத்தின் போது திருமாலடியை எளிதல் அடைய இயலும் என்பது நம்பிக்கை ஸ்ரீவைஷ்ணவர்களின் நம்பிக்கை. பஞ்ச சம்ஸ்கார சடங்குகள் முறையே

சங்கு சக்கர முத்திரை பதித்தல்

அக்கினியில் சூடேற்றப்பட்ட சக்கரம் மற்றும் சங்கு முத்திரைகளை, பக்தர்களின் வலது மற்றும் இடது தோள்பட்டையின் மேல் புறத்தில் ஆச்சாரியர் பதிப்பர்.

திருமண் காப்பிடுதல்

சீடரின் நெற்றி, கழுத்து, மார்பு, முதுகு, தோள் பட்டை, வயிறு ஆகிய ஆறு இடங்களில் 12 திருமண் காப்புகளை, விஷ்ணுவின் 12 சிறப்புப் பெயர்களை கூறி ஆச்சாரியர் காப்பிடுவார்.

தாஸ்ய நாமம் சூட்டுதல்

ஆண் பக்தர்களுக்கு இராமானுஜ தாசன் என்றும்; பெண் பக்தர்களுக்கு இராமானுஜ தாசி என்றும் சிறப்பு பெயரிடுவர். விஷ்ணு பக்தரின் பிறப்புப் பெயர் வாசுதேவன் என இருப்பின் பஞ்ச சம்ஸ்காரத்தின் போது, அடியேன் வாசுதேவ இராமானுஜ தாசன் என்று பெயரிடுவர். இராமானுஜசருடன் தாங்கள் தொடர்புடையவர்கள் என்பதை குறிக்க இராமானுஜ தாஸ்யப் பெயர் புதிதாக ஆச்சாரியரால் சூட்டப்படுகிறது.

மந்திர தீட்சை அளித்தல்

மூன்று தெய்வீக புனித இரகசியத் திரய மந்திரங்கள் (இரகசியத்திரயம்) எனும் எட்டெழுத்து மந்திரம் , துய மந்திரம் மற்றும் சரம சுலோகம் ஆகிய மந்திர தீட்சை பெறும் சீடரின் காதில் மட்டும் கேட்கும் படி ஆச்சாரியர் மந்திர தீட்சை அளிப்பர்.

யக்ஹம்

திருமாலை வழிபடும் முறைகள், உணவு நியமம், மற்றும் பிற வைணவ அடியார்களுடன் நடந்து கொள்ளும் முறைகளை சீடருக்கு ஆச்சாரியர் விளக்குவார்.

நம் ஜீயர் ஸ்வாமிகளிடம் பஞ்சசம்ஸ்காரம் செய்த்து கொள்ள விரும்புவோர்கள் கவனத்திற்கு

இந்த பாரத திருநாடு முழுவதும் சிஷ்ய கோடிகளை கொண்ட நம் ஜீயர் ஸ்வாமிகளிடம் பஞ்சசம்ஸ்காரம் செய்துகொள்ள கீழ்கண்ட படிவத்தினை நிரப்பவும்.

ஸ்வாமியின் பயணத்திட்டங்களை அறிந்துக்கொண்டு அந்த மடங்களில் வந்து சரணாகதி (பஞ்சசம்ஸ்காரம்) பெறலாம்.