ஸ்ரீ தாசரதி வம்சோத் பவாய பாதஸ்ரிதம்
ஸ்ரீ ரெங்க நாராயண யதீஸ்வர பாத ஸ்ரீயதம்
ஜானகி சேஷாத்ரி பௌத்ராய கௌண்டின்ய கோத்ரஸ்ய
செண்டலங்கார சென்பகமன்னார் ஸம்பத்குமார ராமாநுஜ யதிப்யோ நம:
ஸ்ரீ கௌண்டின்ய ஸத் கோத்ர ஸித்தப்ரஞ்யம் ஸிதக்ரயம்
ஸ்ரீசெண்டலங்கார ராமாநுஜ யதியம் பஜே:
ஸாந்தம் தாதம் சதானந்தம் மந்த்ர மந்த்ராத்தபோதகம்
ஸ்ரீ செண்டலங்கார ஸம்பத்குமார ராமாநுஜ சிரியந்தி பஜே:
தற்போது இந்த பீடத்தை அலங்கரிக்கும் ஸ்ரீ செண்டலங்கார செண்பகமன்னார் சம்பத்குமார ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள், ஸ்ரீரங்கம் ஸ்ரீ ராமானுஜ மடத்தின் ஐம்பதாவது ஜீயர் பட்டம் ஸ்ரீமத் ஸ்ரீரங்க நாராயண ஜீயர் ஸ்வாமிகளிடம் இருந்து சன்யாசம் பெற்றவர்.
தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ப ஜீயர் ஸ்வாமிகள் கோயில் நிர்வாகத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல் நம் ஜீயர் ஸ்வாமிகளின் பார்வையானது,
நம் வைணவக்கடலில் உள்ள உடையவர் என்ற ஏரியின் 74 மதகுகள் வழியாக வந்த ஆச்சாரியர்கள் உடையவரின் சித்தாந்ததை உரைத்தும் பஞ்சசமஸ்காரம் செய்வித்தும் அனைத்து மக்களையும் வைணவராக்கி வந்து கொண்டு இருக்கின்றனர் ஆனால் ஜீயர்கள் கோயில் நிர்வாகத்திலே மூழ்கி கிடக்கின்றனர். அவர்களும் மக்களிடம் சென்று உடையவரின் கொள்கைகளை உலகறிய செய்தல் வேண்டும் என்பது நம் ஜீயர் ஸ்வாமிகளின் மிகப்பெரிய எண்ணம் இதை இவர் இடைவிடாது மக்களை சந்தித்தும் மடத்திற்கு வரவைத்தும் செய்து கொண்டே வருகின்றார்.
அன்னம் ப்ரப்ரம்ம சொரூபம் – நம் மடத்திற்கு வந்து பிரசாதம் புசிக்காது சென்றவர் இலர். இயற்கை இடர்பாடுகள் மக்களை வாட்டும் போது அங்கே இடர்களை களைய நம் ஜீயர் ஸ்வாமிகள் இருப்பார்.
கோயில் திருவிழா வைபவங்களில் அன்னதானம் செய்வது மட்டும் இன்றி வர்தா புயல், கஜா புயல் மற்றும் கோரனோ வைரஸ் என்று மக்கள் கட்டுண்டு இருக்கும் போது அனைவரின் அத்யாவசிய தேவைகளை தீர்த்தது மட்டும் இன்றி அவர்களை பசியால் வாடாது காத்துக்கொண்டவர் நம் ஜீயராவார்.
வர்தா புயலால் கடலூர் மிகவும் பாதிக்கபட்ட மக்களுக்கு பசிப்பிணி போக்கியது மட்டுமின்றி அவர்களின் வாழ்வாதாரத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச்சென்ற பெருமை நம் ஜீயர் ஸ்வாமிகளுக்கு உரியது.
நம் வைணவ சித்தாந்தம் மட்டும் இன்றி சனாதன தர்மத்திற்கு ஒரு தீங்கு கலங்கம் ஏற்படுமாயின் அங்கே முதலில் ஒலிக்கும் குரல் நம் ஜீயர் ஸ்வாமிகளாகும்
நம் ஜீயர் ஸ்வாமிகள் உடையவரால் திருகுலத்தார் என்று அழைக்கப்பட்டவர்கள் வசிக்கும் இடங்களுக்கே சென்று தீண்டாமையை அகற்றும் செயலாற்றல் கொண்டவர். இதன் மூலமாக பல மதமாற்றங்களை தடைசெய்தவர் மற்றும் நம் தாய் மதமான சனாதன தர்மத்திற்கு பலரை திரும்ம வரச்செய்தவர் நம் ஜீயர் ஸ்வாமிகள்
நாட்டுமாடுகள் எப்படி இருந்தாலும்(கறவைகள் அற்றும் நோய்வாய் பட்டும்) அவைகளை பாதுகாத்து பராமரிக்க தூத்துக்குடி மற்றும் ஓசூரில் 25 ஏக்கர் நிலப்பரப்பில் செங்கமலம் என்ற கோசாலை துங்கியுளார்.
கோசாலை அமைத்தல் மட்டும் கோ சம்ரஷ்ணம் ஆகாது என்பதை ஜீயர் ஸ்வாமிகள் அவ்வப்போது காண்பித்துகொண்டே இருப்பார், “அடிமாட்டிற்கு (மாமிசத்திற்காக) சித்திரவதை படுத்தி செல்லும் பல பசுமாடுகளை ஸ்மாமிகளை களத்திற்குச்சென்று அவைகளை மீட்டு பாதுகாப்பவர் ஆவார்.
மானிடராய் பிறந்தோருக்கு இன்றி அமையாத ஒன்றில் கல்வியும் உண்டு அத்தகைய கல்வி பயிலும் மாணக்கர்களை ஊக்கம் படுத்துவிதமாக ஜீயர் ஸ்வாமிகளே நேரடியாக சென்று கல்வி உபகரணங்கள் தேவைப்படுவோருக்கு வழங்கிவருகிறார்.
தான் பீடமேற கோயிலை மட்டும் கவனிக்காது ஆதரவு அற்று இருக்கும் புராதனகோயில்கள் மற்றும் ஒருகால திருவாராதனம் நடைபெறாத கோயில்கள் சைவ வைணவ மற்றும் மாத்வ பேதமின்றி ஸ்வாமிகள் உதவிசெய்து வருகிறார்.